
அநுராதபுர நகரத்தில் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த கட்டடம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்படும்போது ஹோட்டலின் கீழ் மாடியில் 10 இருந்துள்ளனர்.
இவர்களில் மூவர் கீழே குதித்தமை காரணமாக காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுர மாநகரசபையின் தீயணைப்பு படையினர் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஹோட்டலில் இருந்த கேஸ் சிலிண்டரிலிருந்து ஸெ வெளியேறி ஹேட்டல் முழுவதும் பரவியமையே தீ விபத்திற்கான காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment