
தங்கநகை தொழிற்சாலையில் கஜ முத்துக்கள் மறைத்து வைத்திருப் பதை சோதனையிட வந்ததாகக் கூறி துப்பாக்கிகளுடன் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டி நகரில் நிகழ்ந்துள்ளது.
கண்டி பேராதனை வீதியில் அமைந்துள்ள தங்க நகை தொழிற்சாலையிலேயே இக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவு 8.00 மணியளவில் இராணுவ சீருடைக்கு சமமான உடையில் துப்பாக்கிகளுடன் வந்த சிலர் அங்கு கஜ முத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அங்குள்ளவர்களை அச்சுறுத்தி சோதனை செய்வது போன்று நடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபா தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். என்று செய்திகள் தெரிவிக்கிறது
இது தொடர்பாக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்றும் தெரிவிக்கப் படுகிறது .LM
0 comments :
Post a Comment