அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்கள் மற்றும் கல்வி, கல்விசாரா உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இரத்தானம் வழங்கி வைப்புஎம்.ஜே.எம். சஜீத்-
“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”எனும் மகுட வாசகத்திற்கு அமைவாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி 2022/2024 ஆம் பிரிவு ஆசிரிய பயிலுனர்களினாலும், கல்வி, கல்விசாரா உத்தியோகத்தர்களினாலும் இரத்தானம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கி.புண்ணியமூர்த்தி தலைமையில் இன்று (16) கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.சி. ஜூனையிட் , கல்வி, கல்வி சாரா உத்தியோகத்தர்கள், இரத்தவங்கிக்கு பொறுப்பான வைத்தியர் ஏ. எல். எம். றுஸ்தான், ஏ. ஏ.எப். மஸீறா மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :