மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் என்னை ஏன் கைது செய்ய வேண்டும் -ஆசாத் சாலி


ஸாத் சாலியை கைது செய்யவே நேற்று மாலை சி.ஐ.டியினர் வீட்டுக்கு வந்தனர். குடும்பத்தினர் தெரிவிப்பு

தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலியை கைது செய்ய முனையும் தொடர் முயற்சியின் ஒரு கட்டமாக நேற்று (27.04.13) மாலையும் இரகசிய பொலிஸார்; தேடுதல் நடத்துவதற்கான எவ்வித சட்டரீதியான ஆவணங்களுமின்றி அவரது வீட்டுக்குள் புகுந்து மீண்டும் சோதனையிட்டுள்ளதோடு அஸாத் சாலி எங்கே என்றும் கேட்டுள்ளனர். -

(சி.ஐ.டியின் அறிவித்தல் இணைப்பு) 

குறிப்பிட்ட நேரத்தில் அஸாத் சாலி வீட்டில் இருக்கவில்லை.அவரது
மனைவியே பொலிஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வெளியே சுமார் எட்டுப் பேர் அடங்கிய ஒரு பொலிஸ் கோஷ்டியை நிறுத்திவிட்டு, அஸாத் சாலியை எதிர்வரும் 29ம் திகதி காலை ஒன்பது மணிக்கு பொலிஸ் தலைமையக நான்காம் மாடியில் லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலம் ஒரு குறிப்பையும் வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர். பொலிஸார் தொடர்ந்தும் அஸாத் சாலியின் வீட்டுக்கு வெளியே நிலை கொண்டுள்ளனர்.ஏற்கனவே தன்னை கைது செய்ய முயன்ற ஒரு விடயத்தில் அஸாத் சாலி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை என்று அஸாத் சாலி திட்டவட்டமாக இவற்றை மறுத்துள்ளார்.நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களுக்கு எதிராகவும், சகல இனத்தவர்களும் சம உரிமைகளோடு நிம்மதியாக வாழும் ஒரு சூழல் இந்த நாட்டில் உருவாக வேண்டும் என்பதற்காகவே தான் குரல் கொடுத்து; வருவதாகவும் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் மே தின வரலாற்றில் முதற் தடவையாக இனவாதத்துக்கு எதிரான ஒரு மே தினத்தை இம்முறை கொழும்பில் நடத்தத் தான் திட்டமிட்டுள்ளதாகவும்,இனவாதம் மற்றும் மதவாதம் என்பனவற்றுக்கு எதிரான பௌத்த மதத் தலைவர்களும் இதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அஸாத் சாலி அதனை தடுக்கும் வகையிலேயே அரசு தன்னை எப்படியாவது கைது செய்ய அபாண்டமான குற்றச்சாட்டுக்களை தன்மீது சுமத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :