மலேசியாவில் தமிழர்களை குறிவைத்து தேர்தல் பிரச்சாரம்.

லேசியாவில் தமிழர்களை குறிவைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் தென் கிழக்கு ஆசியப்பகுதியில் அமைந்துள்ள மலேசியாவை 
பிரிட்டிஷார் ஆண்டுவந்த போது இந்தியா, இலங்கையிலிருந்து தமிழர்கள் பெரும்பான்மையாக அங்கு குடியமர்த்தப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்து வரும் அவர்களின் எண்ணிக்கை இன்று சுமார் 10 லட்சமாக உள்ளது.

வரும் மே மாதம் 5-ம் தேதி மலேசிய பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 222 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள மலேசியா பாராளுமன்றத்தில் 60 எம்பிக்களை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் விளங்குகிறார்கள்.

இந்நிலையில் அங்குள்ள 30 சதவிகித தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து ஆளும் கட்சியினர் மற்றும் எதிர் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழை ஒரு ஆட்சி மொழியாக கொண்டுள்ள அங்கு வாக்காளர்களை கவர முதன்முதலாக தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட துண்டுபிரசுரங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமிழ் பாடல்கள், நாடகங்கள் மற்றும் இண்டர்நெட் வீடியோக்களையும் அவர்கள் வெளியீட்டு வருகின்றனர். தமிழர்களுக்கு பெரும் ஆதரவாகவுள்ள உள்ள ஆளும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சிக்கே, இந்த முறையும் தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :