மாணவியை பலாத்காரம் செய்து விஷம் கொடுத்து கொன்ற பாடசாலை உரிமையாளர்.


ட்டாம் வகுப்பு மாணவியரை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பாடசாலை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், பாடசாலை ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத். இவர், தன் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவியரை, கடந்த, 11ம் திகதி, பாலியல் பலாத்காரம் செய்தார்.

மாணவியர், நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறப் போவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு விஷம் கொடுத்தார். விஷம் அருந்திய நிலையில், வீட்டிற்கு திரும்பிய மாணவியர், அங்கு மயங்கி விழுந்ததை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இருந்தும், சிகிச்சை பலனின்றி, இரு மாணவியரும் இறந்தனர். இறப்பதற்கு முன், மாணவியரில் ஒருத்தி, நடந்த விவரங்களை, தன் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, மாணவியரின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, பொலிசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளியின் உரிமையாள
ரை கைது செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :