ஈராக்கின் தொல்பொருட்களைத் திருடிய அமெரிக்கா.


ராக்கின் வரலாற்று பொக்கிஷங்களை அமெரிக்கா திருடி சென்றுள்ளதாக அந்நாட்டின் தொல்பொருள் ஆராச்சியாளர் ஒருவர் தெரவித்துள்ளார். 

ஈராக்கின் தேசிய அருங்காட்சியத்திலிருந்து 35,000 இற்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய பொக்கிஷங்களை அமெரிக்கா எடுத்துச் சென்றுள்ளதாக தொல்பொருள் ஆராச்சியாளரான இஹ்சான் பாத்தி,  பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பல விலை மதிக்க முடியாத வரலாற்று ஆவணங்களும் அமெரிக்காவால் திருடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஈராக்கின் மத்திய வங்கி மற்றும் ஏனைய  வங்கிகளில் இருந்த அதிகமான பண நோட்டுகளையும் எந்தவித ஆவணமும் செய்யப்படாமல் அமெரிக்காவால் திருடிச் செல்லப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
 
முன்னதாக  கடந்த மார்ச் மாதத்தில் யுனெஸ்கோ துணை இயக்குனர் மௌனிர் பௌசெனகி கடந்த 2003 ஆம் ஆண்டு ஈராக்கை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆக்கிரமித்தபோது 1500 க்கும் அதிகமான ஓவியங்களையும், சிற்பங்களையும் பாக்தாத் அருங்காட்சியத்திலிருந்து திருடியுள்ளனர் என   அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :