குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை மடக்கிப்பிடிக்க பொலிஸார் தயார்.


குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை மடக்கிப்பிடிக்க பொலிஸார் இன்றைய தினம் விசேட திட்டம் ஒன்றை செயற்படுத்தியுள்ளனர்.

24 மணிநேரமும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

சாரதிகள் மட்டுமன்றி பொது மக்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பண்டிகை காலத்தில் பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவை அனைத்தும் குடிபோதையால் வந்த வினை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குடிபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் எனவும் அமைதியாக புதுவருட மகிழ்ச்சியை கொண்டாடுமாறும் அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :