எதிர்வரும் ரமழானுக்குள் உன் கதை முடியும், அஸ்வருக்கு கொலை மிரட்டல்.


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வருக்கு எதிர்வரும் ரமழானுக்குள் உன் கதை முடியும் என  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இவர் மேற்படி தனக்கு பல தடவைகள் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஊடகங்கக்ளுக்கு   தெரிவித்துள்ளார்.

இவற்றில் அதிகமான கொலை அச்சுறுத்தல்கள்  கல்முனை பிரதேசதிலிருந்தே விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் தான் செயற்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும்  ,”எனக்கு இறுதியாக ஏப்ரல் 19 அன்று வந்த தொலைபேசி அழைப்பு மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

எதிர்வரும் ரமழானுக்குள் உன் கதை முடியும் என  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் நான் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். எனது கையடக்கத் தொலைபேசிக்கும் வீட்டிலுள்ள நிலையான தொலைபேசிக்குமே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் அழைப்புகள் வந்தன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :