நாட்டின் சிறந்த தலைமைத்துவத்துடன் புத்துயிர் பெரும் தேசத்தின் கடதாசி ஆலை என்னும் தெனிப்பொருளில் வாழைச்சேனை கடதாசி ஆலை அரச வளங்கள் மற்றும் பொது முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சினால் புணரமைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் முதல் கடதாசி ஆலையின் உற்பத்திகள் ஆயிரம் டொன்னாக அதிகரிக்கப்படுவதற்கான வேலைத்திட்டம் நடைபெற்று வருவதாக கடதாசி ஆலையின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி தேசமான்ய மங்கள செனரத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் நேரடிக் கண்கானிப்பின் கீழ் புணரமைக்கப்படும் கடதாசி ஆலையில் அட்டை உற்பத்திகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் மாதாந்தம் குறைந்தது ஆயிரம் டொன் அட்டைகளை உற்பத்தி செய்வதற்கு நிருவாகம் தீர்மாணித்துள்ளதாக கடதாசி ஆலையின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இங்கு கடமை புரியும் ஊழியர்கள் கருத்துத்
தெரிவிக்கையில்,
யுத்தகாலத்தில் கடதாசி ஆலை மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது ஆனால் ஜனாதிபதியினால் கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தில் அவரது நேரடிக் கண்கானிப்பின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்ட தவிசாளர் மங்கள செனரத்தை நியமித்து கடதாசி அலையின் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் இயந்திரங்கள் திருத்தப்பட்டு வருவதுடன் ஊழியர்களுக்காக துப்பரவு செய்யப்பட்ட குடி நீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதுடன் இங்கு கடமை புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது இதற்காக ஜனாதிபதிக்கும் கடதாசி ஆலையின் தவிசாளருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment