காத்தான்குடி ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தெரிவில் கைகலப்பு.


சப்னி அஹமட்
காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவதும் ,
நிர்வாக சபை தெரிவு கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கூட்டத்திற்கு வருகை தந்த ஒரு பிரிவினரின் வருகைக்கு மற்றுமொறு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. பின்னர் கூட்டத்தை சமாளித்து காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உரை நிகழ்த்தியுள்ளார்.

இதையடுத்து படிப்படியாக கூட்டம் ஒழுங்கு முறையாக நடைபெற்று இறுதிக்கட்டத்தில் நிருவாக தெரிவுக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பணிப்பாளர் எம்.ஜுனைட் கூட்டத்தை வழிநடாத்திக் கொண்டிருந்த நிலையில் பள்ளிவாசல் ஜமாஅத்தார் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்த போது மீண்டும் கூட்டத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இதனை அடுத்து இரண்டு சாராருக்கும் இடையில் அங்கு சிறு அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டமும் இடை நடுவில் கைவிடப்பட்டது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் எம்.ஜுனைட், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமட்லெவ்வை உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :