நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் ஆஸாத் சாலி.



அஹ்னப் சுலைமான்
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை நாளை காலை ஒன்பது மணிக்கு பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் நான்காம் மாடியிலுள்ள லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அசாத் சாலி தரப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக அஸாத் சாலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்

"எனது இல்லத்தில்  நேற்று மாலை இரகசிய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டனர். இதன்போது என்னை விசாரித்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் நான் வீட்டில் இருக்கவில்லை. எனது மனைவியே பொலிஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தின் நான்காம் மாடியிலுள்ள லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலமான ஒரு குறிப்பை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்"  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :