அரசைக்கவிழ்க்க 40 ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் பா.ம.உறுப்பினர்கள் ஆதரவு.


ரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு 40 ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 40 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவிய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சந்திரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மக்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையுமே கோருகின்றனர்!- ஐ.தே.க

வடக்கு மக்கள் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையுமே கோரி வருவதாகவும் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கையின்றி வாழ்கின்றனர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மக்கள் கோருவதனையே நாம் வழங்க வேண்டும். வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கைக் குறித்து திருப்தி அடைய முடியாது.

அரசாங்கத்தை விடவும் வடக்கில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி மீது நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

நிவாரணங்கள் இன்றி வாழக்கூடிய பின்னணி இன்னமும் உருவாக்கப்படவில்லை.

30 ஆண்டுகள் போர் நீடித்தாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. பிரபாகரன் பொருளாதாரத்தை வீழ்த்தவில்லை, பிரபாகரன் செய்யாதனை இந்த அரசாங்கம் செய்துள்ளது.

தற்போது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே காணப்படுகின்றது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டில் அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் அவசியம் – ரணில்

2014ம் ஆண்டில் அராசங்கத்தை மாற்றும் தேர்தல் அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

இது தொடர்பில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே காணப்படுகின்றது.

போர் நிறைவடைந்துள்ள போதிலும் சமாதானம் நிலைநாட்டப்படவில்லை. வடக்கு. கிழக்கு தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

வடக்கில் இன்னமும் ஜனநாயகம் நிலைநாட்டப்படவில்லை.

வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமன்றி நாட்டு அனைத்து மக்களும் ஜனநயாக ஒடுக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :