எம்பிலிபிட்டிய - பாணமுர, ஜயவிங்கும்புர பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலில் சென்று முடிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல் நேற்று (13) இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டதோடு மோதலை தடுக்க முயன்ற ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார்.
கொலை தொடர்பில் ஒருவர் பாணமுர பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணமுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment