இந்த தேசத்தின் சொந்தக்காரர்களாகிய நாம் இந்த நாட்டுக்கு விசுவாசமாகவும் ஏனைய சகோதரர்களுடன் அந்நியோன்யமாகவும் வாழ்ந்து வருகின்றோம்.
இன்று இந்த உறவுக்கு வேட்டு வைத்தாற்போல அசாதாரண சூழ்நிலையொன்று தீய சக்க்திகளால் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காலத்துக்குக்காலம் உருவாகும் இவ்வாறான தீய சக்திகளின் செயற்பாடுகளினால் எமது தாய் நாடு பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றது. இத்தீய சக்திகளின் செயற்பாடுகளை நிறுத்தி எமது தேசத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.
பல்லிண சமுகம் வழுகின்ற ஒரு நாட்டுல் சிறுபான்மைச் சமூகமொன்று இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்வது சாதாரண விடயமாக இருப்பினும் இவ்வாறான சூழ்நிலைகளின் போது எமது பிரதிபலிப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது ஆழமாக நோக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் சமூகம் தனது இலச்சியப்பணியை மறந்ததுதான் இன்றைய குழப்பகரமான சூழ்நிலைக்கு அடிப்படைக்காரணமாகும். பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சட்டத்தரணி கூறும் போது “முஸ்லிம்கள் தமெக்கென்று ஒரு வேலியை போட்டுக்கொண்டு வாழுகின்றனர். புனித அல்-குர்ஆனில் கூறப்பட்ட அனைத்து விடயங்களும் சாத்தியமானவை, உண்மையானவை. ஆனால் முஸ்லிம்கள் அவ்விடயடங்களைப்பற்றி ஏனைய சமூகங்களுக்கு தெளிவு படுத்துவதில்லை. ஹறாம் பற்றிய சந்தேகங்கள் சரிவர தெளிவு படுத்தப்பட்டிருந்தால் இந்நிலமை உருவாகியிருக்காது. அதே நேரம் ஒரு சமயத்தாரின் உரிமைகளில் பிறர் தலையிடுவது அநீதியானது” என்றும் குறிப்பிடுகின்றார்.
நடு நிலை சமூகமாக அனுப்பப்பட்ட நாம் ஏனைய மனிதர்களுக்கு சான்று பகிர்கின்ற பணியை மறந்ததனால் ஏற்பட்ட விளைவே இத்தகைய குழப்பகரமான சூழ்நிலை என்பது தெளிவாகப்புரிகின்றது.
இந்நாட்டு மக்கள் மனித நேயத்துடனும் இன ஐக்கியத்துடனும் வாழ விரும்புகின்றனர். இருப்பினும் ஒரு சில தீய சக்திகளின் விஷமப்பிரச்சாரங்கள் இனங்களுக்கிடையிலான சக வாழ்வுக்கும் புரிந்துணர்வுக்கும் பாதிப்பாக அமைந்துவிடுகின்றமை கவளைக்குரியதாகும்.
இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளின் போது இந்நாட்டு மக்கள் கருத்து வேறுபாடுகளால் பிளவு படாமல் விழிப்புணர்வோடும் முன்னெச்சரிக்கையாகவும் செயற்பட்டு தீய சக்திகளின் பிடியிலிருந்து எமது நாட்டை பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக அறிவு பூர்வமான முறையில் வழிநடாத்தப்படுவது காலத்தின் தேவையாகும்.
இதனை கருத்தில் கொண்டு அசாதாரண சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைக்கின்றோம்.
இடம் : அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளிவாயல்
காலம் : 29.03.2013 வெள்ளிக்கிழமை மாலை 04 மணி முதல் 06 மணி வரை.
ஏற்பாடு : அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம்


0 comments :
Post a Comment