.jpg)
அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை,பொத்துவில் போன்ற பிரதேசங்களில் பரவிய ;ஒரு வதந்தியால் இப்பிரதேச பெற்றோர் பெரும் குழப்பமடைந்து தமது தொழில்களையெல்லாம் அப்படியே இடையில் விட்டுவிட்டு பாடசாலை சென்ற தம் பிள்ளைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச்செல்வதற்காக பாடசாலைகளை நோக்கிப்படையெடுத்தனர்.
இதனால் இப்பிரதேசத்திலுள்ள பிரபல்யமான பாடசாலைகளுக்கு முன்னால் ;பெரும் குழப்பநிலையும்,வாகனநெரிசலும் ஏற்பட்டது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு பாடசாலை மாணவர்களை பலாத்காரமாக பஸ்களில் ஏற்றிச்செல்கின்றனர். என்ற எவ்வித அடிப்படையுமற்ற வதந்திச்செய்தி பொய்யானது. இட்டுக்கட்டப்பட்டது;
எனக்கல்வி அதிகாரிகளும்,சமூகநலன்விரும்பிகளும்,பாடசாலை நிர்வாகமும் பெற்றோர்களுக்கு எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் தமது பிள்ளைகளை கூட்டிச்செல்வதிலேயே குறியாக நின்றனர்.
;;.அதன் பின் தமது பிள்ளைகளைக் ;கூட்டிச்சென்றுள்ளனர்
பாடசாலை மாணவர்கள் வெளியேறிச் சென்றபின்னரும்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் போன்றோர் பாடசாலை கலையும் நேரம்வரை காத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.வதந்தியால் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆராயாமல் .கிடைக்கும் வதந்திகளை நம்புவது எமது சமுதாயத்திற்குப் பெரிய பாதிப்புக்களையும்,நஷ்டத்தையும் ஏற்படுத்தும் ஆதாரமற்ற பொய்ச் செய்திகளைப் பரப்பி குழப்பங்களை ஏற்படுத்துவது ஒரு பெரும் பாவமாகும்.
0 comments :
Post a Comment