இரத்தினபுரி நகரில் வங்கி திறப்பு விழா ஒன்றினை பகிஷ்கரித்த மெளலவி ஒருவர் மீது முஸ்லிம் வர்த்தகர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து குறித்த வர்த்தகரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இரத்தினபுரி பிரதான பள்ளிவாசலின் மெளலவியாக கடமையாற்றும் முஹம்மத் நிசார் தீன் என்பவர் மீது அந்நகரின் வர்த்தகரான ஹுசைன் என்ற நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். பள்ளிவாசலில் மாணவர்களுக்கு குர்ஆன் கற்பித்துக்கொண்டிருந்த வேளை அங்கு வந்த குறித்த வர்த்தகர் மெளலவி மீது சரமரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதனை அடுத்து பொலிசில் செய்யப்பட முறைப்பாட்டுக்கு அமைவாக தாக்குதல் நடத்திய நபர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் வங்கி திறப்பு விழாவுக்கு குறித்த மெளலவி வருகை தராமையே குறித்த நபர் அவர் மீது தாக்குதல் நடத்தக் காரணம் என தெரியவந்துள்ளது.
.
0 comments :
Post a Comment