கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம நிந்தவூரில்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம கடந்த புதன்கிழமை (2013.03.27) நிந்தவூரிற்கு விஜயத்தினை மேற்கொண்டார்.

புனரமைப்பு செய்யப்பட்ட நிந்தவூர், இமாம் கஸ்ஸாலி வீதியின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவே அவர் நிந்தவூரிற்கு விஜயம் செய்தார்.

இந்த வீதி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் ஜெய்க்கா திட்டத்தின் மூலம் 17 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்,உதுமாலெப்பை, அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வி.கருணைநாதன் உதவிச் செயலாளர் சலாஹூதீன், பிரதேச செயலாளர் றிபாயா உம்மா ஜலீல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் வை.எல்.சுலைமாலெப்பை, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :