பாதுகாப்பு அமைச்சின் நிதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்கிறது -மங்கள சமரவீர


பாதுகாப்பு அமைச்சு நிதி உதவிகள் மூலமே சிறுபான்மையினரின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த சமூகங்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சே நிதி உதவிகளை வழங்கி வருவதாகக் அழுத்தி குறிப்பிட்ட அவர், இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக பாதுகாப்பு அமைச்சு சிங்கள கடும்போக்காளர்களை போஷித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தாம் விரும்பிய மதத்தை அமைதியான முறையில் வழிபாடு செய்வதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் .பொருளாதார  சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகளை திசை திருப்புவதற்காக இவ்வாறு உள்நாட்டில் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவான சிங்கள பௌத்தர்கள் தொழில் செய்து வருவதனை சிலர் மறந்து விட்டனர்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை துரித கதியில் இழந்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :