தமிழகம், புதுவையில் இன்று +2 தேர்வுகள் தொடக்கம்!



(எமது செய்தியாளர்)

சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மொத்தம் 8 லட்சத்து 56 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 5 ஆயிரத்து 769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேரும், தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 பேரும் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்கும் பொருட்டு 5 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :