மூவின மக்களும் சமாதானமாக வாழக்கூடிய ஒரு வழிமுறை கண்டிப்பாக உருவாக்கப் படவேண்டும் -பதேகம சமித்த தேரர்


எம்.அம்றித்: பொது பல சேனா போன்ற இயக்கங்கள் இனவாதத்தையும் மத பிடிவாதத்தையும் ஊக்குவித்து நாட்டை மற்றுமொரு அழிவை நோக்கு வழிநடத்துவதாக தென் மாகாண சபை அரச தரப்பு உறுப்பினர் பதேகம சமித்த தேரர் எச்சரித்துள்ளார். நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். நான் பௌத்தத்தை மதிக்கிறேன் அதேவேளை மற்ற மதங்கள் சார்பில் தோன்றுகிறேன் . பொது பல சேனா , ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தம்மை ஒழுங்கு படுத்திகொண்டு நாட்டை அழித்து விட முயற்சிக்கின்றன .
எம்மை நாமே அழிந்துகொண்ட போர் முடிவுற்றாலும் போராட்டம் இன்னும் முடியவில்லை . எனவே சிங்களவர்களும் தமிழர்களும் , முஸ்லிம்களும் சமாதானமாக வாழக்கூடிய ஒரு வழிமுறை கண்டிப்பாக உருவாக்கப் படவேண்டும் .
தமிழ் மக்கள் சந்திரனை கோரவில்லை , அவர்கள் அதிகார பரவலாக்கத்தை கோருகிறார்கள் . நாங்கள் தெற்கில் அனுபவிக்கும் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் , தமிழ் மக்களுக்கும் கிடைக்க செய்யவேண்டும் . பெரும்பான்மையினரின் விருப்பமே நிலைபெறவேண்டும் என்ற ஹெல உறுமயவின் நம்பிக்கை தவறானதாகும். என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் அங்கு உரையாற்றியுள்ள பதேகம சமித்த தேரர் நம் நாட்டில் மேல் நாடு ,கீழ் நாடு (மேல்நாட்டு சிங்களவர் கரையோர சிங்களவர்) என்ற பிரிவு இன்னும் உள்ளது. தலதா பெரகரவில் ஒருவரும் கீழ் நாட்டு (கரையோர சிங்களவரின்) நடனத்தை காணமுடியாது. அல்லது ‘யாக் பிறைய’ சத்தத்தை கேட்கமுடியாது . என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
lankamuslim
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :