பாவனைக்கு உதவாத ஐம்பதாயிரம் டின் மீன்கள் பறிமுதல்






News1st
பேலியகொடை பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றிலிருந்து பாவனைக்கு உதவாத 50 ஆயிரம் டின் மீன்களை நுகர்வோர் சேவைகள் அதிகார சபை பறிமுதல் செய்துள்ளது.
இதன் பெறுமதி 50 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் சேதமடைந்திருந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் அவை பாவனைக்கு உதவாத நிலையிலுள்ளமை தெரியவந்துள்ளது.
பாவனைக்கு உதவாத டின் மீன்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :