பாலியல் வன்முறைகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாகட்சியின்சார்பில் பாலியல் வன்முறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்சென்னை மெமோரியல் ஹால் முன்பு  நேற்று மாலை 4 மணி அளவில்நடைபெற்றது.

கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்ரபீக் அஹமதுதலைமைதாங்கினார்மாநில செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன்வரவேற்றார்வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சாதென்சென்னை மாவட்ட தலைவர் முகம்மது உசேன்காஞ்சிபுரம் மாவட்டதலைவர் முகம்மது பிலால்திருவள்ளூர் மாவட்ட தலைவர் புகாரி தேசிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில துணை தலைவர் சாகுல் சாகிர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய மாநில பொதுச்செயலாளர்ரபீக் அஹமது தமது உரையில் :

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை என்பது நாகரீக உலகை அமைத்து விட்டதாக பிதற்றிகொள்ளும் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் பெருத்த அவமானமாகும்.இது ஏதோ ஒரு தினத்தில்,ஏதோ ஒரு நகரத்தில் மட்டும் நடந்து முடிந்துவிட்ட சம்பவம் என்று விட்டு விட முடியாது.

ஒவ்வொரு 23 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன் கொடுமை நடப்பதாகவும்2012 ஜனவரி முதல் நவம்பர் வரை டெல்லியில் மட்டும் 635 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் தலைநகர் டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் போதே தமிழகத்தில் புனிதா என்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதைப்போலவே கடந்த 2007 டிசம்பர் 26 ஆம் நாள் ஹைதராபாத்தில் ஆயிஷா மீரா என்ற 19 வயது மருத்துவ மாணவி அவர் தங்கியிருந்த விடுதியிலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் கடந்த 5 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கின்றனர்.

எனவே அதிகரிக்கும் பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தக்கோரியும்,குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவும்இதற்கு மூல காரணியாக விளங்க கூடிய ஆபாச சினிமா,ஆபாச விளம்பரங்கள் ஆபாச உடைகள் அணியும் கலாச்சாரம் ஆகியன வற்றை  தடை செய்யவும்பூரண மது விலக்கை அமல் படுத்தவும் வலியுருத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
எனவே

Ø மத்திய மாநில அரசுகள் பாலியல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

Ø பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
Ø உணர்ச்சிகளை தூண்டும் வகையில் வெளியிடப்படும ஆபாச சினிமாக்கள்ஆபாச விளம்பரங்கள் கண்கானிக்கப்பட்டு  தடை செய்யப்பட வேண்டும்.

Ø பள்ளிக் கல்விகளில் ஆரம்பம் முதல் ஒழுக்கப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும்.

Ø மதுரை ஆதீனம் கூறியது போன்று பெண்கள் தங்களது உடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Ø பாலியல் வன்கொடுமைகளை கண்டிக்கும் அரசுகள் அதற்கு காரணமான மதுக்கடைகளை ஏற்று நடத்துவது கேளிக் கூத்தான செயலாகும்.
Ø எனவே பாலியல் வன்முறைக்கு மூல  காரணியாக விளங்கும்  மதுவையும்ஆபாசங்களையும் தடை செய்ய வேண்டும்என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் அண்ணாச்சி நன்றியுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள்செயல் வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


மேலும் விபரங்களுக்கு ....

B.S.I.கனி 
மாநில பொருப்பாளர்
செய்தி ஊடகத்துறை 
எஸ்.டி.பி.ஐ கட்சி-தமிழ்நாடு
தொடர்புக்கு:  +91 96558 09510




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :