அக்கரைப்பற்றில் டெங்கு கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு! கருத்தரங்கு

-என்.சப்னாஸ்-

அக்கரைப்பற்று பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த அபாய நிலையை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஏற்பாட்டில் அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழு மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவின் ஒத்துழைப்புடன் இன்று விழிப்புணர்வும்இ துண்டுப்பிரசுர விநியோகமும் இடம்பெற்றன.
அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கி.அ.மு.குழு செயலாளருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர் ஈ.ரி.சலீம்இ கிராம உத்தியோகத்தர் எஸ்.ரி.எம்.றிஜான் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடைகள் மற்றும் வீடுகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
டெங்கு காய்ச்சல் உட்பட மழை மற்றும் வெள்ளத்தினால் பரவக்கூடிய தோற்று நோய்கள் குறித்தும் விளிப்புனர்வூட்டப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :