ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!




இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண 
தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக மூதூரை சேர்ந்த ரிசானா நபீக், அங்கு தான் புரிந்த வீட்டு உரிமையாளரின் நான்கு மாத குழந்தையினை கடந்த 2005ஆம் ஆண்டு கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு நீண்ட காலமாக அந்நாட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குழந்தையை கொலை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்து அந்நாட்டு நீதிமன்றம் ரிசானாவிற்கு மரண தண்டனை தீர்ப்பு விதித்திருந்தது.

இந்த தீர்ப்பினை மீள் பரீசிலினை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைப்புகளும் சவூதி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :