சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை இனியாவது அரசாங்கம் தடைசெய்யுமா? - எஸ்.எல்.முனாஸ்

தனது சிறு வயதில் வறுமை என்னும் ஒரே காரணத்துக்காக வெளி நாடு சென்று தான் செய்யாத குற்றத்திற்காக பல வருடங்கள் சிறையில் இருந்து இன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை மூதூர் ரிசானா நபீக் இன் அநுதாபச்செய்தியில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்ததாவது.

தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்பாவிப்பெண்ணான மூதூரைச்சேர்ந்த ரிசானா நபீக் என்பவர் மிகவும் வறுமையான குடும்ப நிலையினைக்கொண்டவர் அந்த பெண்ணை வெளிநாடு அனுப்ப பல மோசடிகளைச்செய்து பணம் சம்பாதித்த வெளிநாட்டு முகவர் நிலையம் மற்றும் முகவர் ஆகியோர்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும் இன்று வறுமைக்காக பணம் சம்பாதிக்கச்சென்ற அப்பாவிப்பெண் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு இந்த உலகைவிட்டுப்பிரிந்த செய்தி எமக்கெல்லாம் பெரும் மனவர்த்தத்தையளிக்கிறது.
இனிமேலாவது இலங்கை அரசு வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடை செய்யவேண்டும் என்று அனைவரும் கோரிக்கையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன், பணிப்பெண்ணாக வெளிநாடுகளுக்கு பெண்களை எடுத்து வேலைக்கமர்த்தும் சிலர் வேலையாட்களை அடிமைகளாகப் பயன்படுத்துகிறார்கள், உண்ண நேரத்துக்கு உணவின்றி ஒழுங்கான ஆடைகளின்றி, சரியான உறக்கமின்றி அல்லலுறும் செய்திகளும் தண்டிக்கப்படும் செய்திகளும் நாளுக்கு நாள் நாம் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம்.
எனவே இந்த நிலமை மாறவேண்டும் இலங்கைப்பெண்களை வெளிநாடுகளுக்கு வீட்டுவேலைக்கு அனுப்புவதனை முற்றாக தடுக்க வேண்டும் இன்று ரிசானா என்னும் அப்பாவிப்பெண்ணுக்கு நடந்த நிலமை இன்னும் எத்தனை ரிசானாக்களுக்கு நடக்கும் என்று கூற முடியாது,
ரிசானாவால் இறந்ததாகக்கூறப்படும் குழந்தையின் தாய் கொஞ்சமேனும் மன்னிப்பு வழங்க விரும்ப வில்லை அதிலிருந்து விழங்குகிறது ஒரு நாட்டு ஜனாதிபதி சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள், மேலும் பல பொறுப்பதிகாரிகள் நேரடியாகச்சென்று மன்னிப்பு கேட்டும் மன்னித்து விடுதலை செய்ய விரும்பாமல் கொலைசெய்யத்தான் வேண்டும் என்று ஒரு பிடியாக இருந்து இன்று  தூக்கில் போடவைத்த அந்த சவுதிஅரேபிய பெண்ணைப்போன்ற வக்கிரகுணம், அராஜகத்தன்மை இன்னும் இன்னும் எத்தனை பெண்களிடம் இருக்கும்  என்பதனை நாமறிய முடியாது!.
எனவே இலங்கைப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதனை தடை செய்வதனைத்தவிர இதற்க்கு வேறு எந்த பாதுகாப்பும் கூற முடியாது. 
இன்று தூக்கிலிடப்பட்ட ரிசானா நபீக்கின் மறுமை வாழ்வுக்காக தூஆ செய்வதுடன் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் அவரின் குடும்பத்திற்க்கும் மன ஆறுதலைக்கூறிக்கொள்வோம். என்று தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய எஸ்.எல்.முனாஸ்.


                                                ரிசானாவின் தாயும் இரு சகோதரிகளும்.
                                                 ரிசானா நபீக்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :