ஈரானிய கப்பல் தப்பியோட்டம்..!!











இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய கப்பலொன்று தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எம்.வீ. அமீனா என்னும் பெயருடைய ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றே இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
 
ஜெர்மனியின் டீ.வி.பி. வங்கியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கப்பல் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக இலங்கைக் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
 
தப்பிச் சென்ற கப்பலின் மீது எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் அதனைப் பொருட்படுத்தாது கப்பல் பயணம் செய்ததாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
இலங்கைக் கடற்பரப்பிலிருந்து 12 கடல் மைல் தொலைவிற்கு சென்றதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டத்தின் பிரகாரம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க முடியாது என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
 
ஜெர்மனிய வங்கியின் கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலை தடுத்து வைக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் 12ம் திகதி உயர் நீதிமன்றம், கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :