நீ என் தோழி.

















என் தோழி நீ
என்னோடு பேசி பேசி
எனக்குள்
சிறைப்பட்டுப் போய்
காலங்கள் நகர்ந்து விட்டன

..
நான்
சாதாரமாகத்தான்
உன்னைஎண்ணினேன் !

ஆனால்
தினம்தினம்
பேசும் உன் வார்த்தைகள்

உன் இதயத்தை
இமயமென
எனக்கு பறைசாற்றியது

அதனால் தானே
என் இதயத்தோடு
இப்படி
இறுகிப் போனாய்


ப்ரியோய் .....
அன்பு தெளிந்த
உன் பேச்சுக்ககளை
நான்
அப்படியே
மனதில் பதிந்திடுவேன்


உன்னை நான்
சிறை பிடித்த வரலாறு
தூ ய்மையானது

நான்
காலத்தை நேசிக்காதவள்
இற்றுப் போன
சுமுதாய நாற்றத்துக்குள் -
நீ மட்டும்
எப்படி ...
எனக்கு
நட்பு மனம் தந்தாய்

நீ வீசிய
பாச வலைக்குள்
சிக்கி
கனநாள்
என்னை
கனவாக்ஆக்கி விடாதே

என் இதயம் நீ தானே .
கலைமகள் ஹிதாய ரிஸ்வி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :