நள்ளிரவு பாராது துரிதமாக செயற்பட்டு வெள்ள நீரை அகற்றும் பணியில் கல்முனை முதல்வர்


 (சௌஜீர் ஏ முகைடீன்)

கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட தாழ் நில குடியிருப்புக்களும்இ வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.


நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பண்டிருப்பு பகுதியில் உள்ள வள்ளுவர் வீதிஇ மயான வீதி கடற்கரைப் பகுதியை அண்மித்த பிரதேசங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டது. குறித்த பிரதேசங்களிற்கும்   முதல்வர் நள்ளிரவு வேளையில் சென்று பார்வையிட்டு வெள்ளம் வடிந்தோட தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டார்.


இதன்போது பொதுமக்களுடன் கருத்துக்களை பரிமாறிய முதல்வர் தெரிவிக்கையில். மாநகர பிரதேசத்தில் பிரதேச செயலகங்கள் மூலமாக அமைக்கப்பட்டுகின்ற வடிகான்கள் தொடர்பில் மாநகர சபையுடன் கலந்துரையாடி மேற் கொள்ளப்பட வேண்டும். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிற்கான  வடிகான் திட்ட வரைபு மாநகர சபையிடம் இருப்பதனாலும்இ வெள்ளப் பெருக்கு ஏற்டுகின்றபோது மாநகர சபையே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதனாலும் எம்மோடு கலந்துரையாடி செயற்படுத்துவதன் மூலம் சீரான வடிகான்  அமைப்புகளை ஏட்படுத்த முடியும். இல்லாதபோது வடிகான்களை அமைத்தும் பயன் இல்லாது வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றது எனத் தெரிவித்தார்.

சென்ற சனிக்கிழமை தொடக்கம் முதல்வர் மேற்படி நடவடிக்கைகளிற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டுவருகின்றார். மக்கள் நள்ளிரவு என்று பாராது எந்நேரத்திலும் முதல்வரின் கையடக்கத் தொலைபேசி இலக்கமான 0777563770 உடன் தொடர்பு கொண்டு வெள்ளம் தொடர்பாக தெரியப்படுத்துவதன் மூலம் முடியுமான அளவு வெள்ளத்தினை வடிந்தோடச் செய்வாற்கான ஏற்பாடுகளைச்  செய்து கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

வீதியினை விட தாழ்ந்து காணப்படுகின்ற வீடுகளில் ஏற்படுகின்ற வெள்ளத்தினை மோட்டர் மூலம் இறைப்பதற்கான நடவடிக்கைகளும் மாநகர சபையினால் மேற்கொள்வதற்கு முதல்வரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மாநர சபையின் ஊழியர்கள் எந்நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். அத்தோடு ஊழியர்கள் நள்ளிரவு வேளையிலும்  அழைக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கடமையாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :