சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) பெண் சாரணர் அங்குரார்ப்பன நிகழ்வும், முழு நாள் பயிற்சிப் பட்டறையும் திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.ஏ. அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ. மஜீத், முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா, உதவி மாவட்ட சாரண ஆணையாளர்களான கே.எம். தமீம், எஸ்.எல். முனாஸ் (அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்) மற்றும் எம்.எப். றிபாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேற்படி பெண் சாரணர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் சாரணியம் தொடர்பான பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியில் சாரணர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment