சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தாங்கள் கருதினால் எனக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டக்கல்லூரி அதிபர் கலாநிதி டபிள்யூ.டி.ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இன்று காலை சட்டக்கல்லூரி அதிபரிடம் பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மகஜர் ஒன்றைக் கையளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சையில் எந்தவிதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லை. இருப்பினும் அவ்வாறு ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கருதினால் எனக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யுங்கள். நீதிமன்றத் தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்வோம் எனவோம் சட்டக் கல்லூரி அதிபர் ரொட்ரிகோ மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் அடங்கிய ஆவணத்தையும் சட்டக்கல்லூரி அதிபர் முறைப்ப்பாட்டாளர்களிடம் கையளித்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தாம் இவ் ஆவணத்தைப் பயன்படுத்தி மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment