வறுமையற்ற இலங்கை தேசம் நிறைவான இல்லம் - ஹிஸ்புல்லாஹ்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வறுமையற்றதோர் இலங்கை தேசம் நிறைவான இல்லம் -வளமான தாயகம் எனும் தொனிப் பொருளிலான விசேட அறிவூட்டல் மகாநாடு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ,சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் 15-01-2013 திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு -காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள்,சமுர்த்திஉத்தியோகத்தர்கள்,திவிநெகும பட்டதாரிகள் ,சமுர்த்தி பெறும் பயனாளிகள் ,கிராம மட்டத் தலைவர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக விழிப்பூட்டப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் றமீஸா ,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பு செயலாளர் றுஸ்வின்,காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி சுபைர்,காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளர் சுல்மி உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :