பல்கலைக்கழக மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட தலைமைத்துவ பயிற்சி இன்று

பல்கலைக்கழக மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட தலைமைத்துவ பயிற்சி இன்று 16 ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தலைமைத்துவ பயிற்சிக்குத் தெரிவான மாணவர்களுக்கு அதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அக்கடிதங்கள் கிடைக்காதோர் http://www.leadership.mohe.gov.lk/என்ற இணையத்தள முகவரியூடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.ஜீ.ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,

இரண்டாம் கட்ட தலைமைத்துவப் பயிற்சிக்காக 7860 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு நாடு பூராகவும் உள்ள 22 முகாம்களில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடிதம் கிடைக்காதோர் மேற்கண்ட இணையத்தளத்தில் தமது பெயர்கள் இருக்குமானால் அதன் பிரதியொன்றை எடுத்து பயிற்சி முகாம்களுக்கு சமுகமளிக்க முடியும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :