குற்றபிரேரணை குறித்து நாளை மற்றும் நாளை மறுநாள் விவாதம்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்து பாராளுமன்றில் நாளை மற்றும் நாளை மறுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது. 

இவ்விவாதத்தில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை மக்கள் விடுதலை முன்னணி எடுத்துள்ளது. 

இது குறித்து இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெளிவுபடுத்தியதோடு விவாதத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவையும் அறிவித்தார். 

இதேவேளை, நாளை இடம்பெறவுள்ள விவாதத்தில் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

அரசின் குற்றப்பிரேரணைக்கு எதிராக விவாதித்து அந்த பிரேரணைக்கு எதிராகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் நாளைய விவாதத்தில் பங்கேற்கும் என்பதோடு குற்றப்பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :