KI.மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ் கிராமங்கள் சிலவற்றை கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுகளுடன் இணைப்பதற்கு பொதுநிருவாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கைஎடுத்துவருவதை கண்டித்தும், கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் முடிவுகள் கிடைக்கப்பட்டுள்ளதை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் ஹர்தால் முழு அடைப்பு போராட்டம் ஒன்றினை இன்று மட்டக்களப்பில் நடத்துகின்றது.
முஸ்லிம்களின் எல்லை மீள் நிர்ணய கோரிக்கையை மழுங்கடிக்கும் வகையில் இந்த ஹர்தால் முழு அடைப்பு மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் எனும் அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்றது.இப்போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (18.01.2013) வெள்ளிக்கிழமை முஸ்லிம் வர்த்தகர்கள் வழமைக்கு மாற்றமாக கடைகளை திறந்து எதிர்ப்பினைக் காட்டுமாறு கல்குடா உலமா சபை அழைப்புவிடுத்துள்ளது.
அத்துடன் ஜூம்ஆத் தொழுகையினை தொடர்ந்து ஓட்டமாவடி சுற்றுவட்டாரத்தில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்கள் சிலவற்றை கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுகளுடன் இணைப்பதற்கு பொதுநிருவாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதை கண்டித்தும் அந்த முடிவை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் கேட்டே இந்த கடையடைப்பு ஹர்தால் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment