றிசானா நபீக்கை வைத்திருந்த சிறைக்கு வழமை போன்று இன்றும் பார்ப்பதற்காக சென்றேன் ஆனால் இன்று றிசானாவை பார்க்கமுடியவில்லை கவலையுடன் வீடு திரும்பினேன் என றிசானாவை சிறையிலிருந்து மீட்க பாடுபட்ட சஊதி அரேபியாவில் பணியாற்றும் டாக்டர் கிபாயா இப்திகார் ஊடகங்களுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார்.சஊதி அரேபியாவில் பணியாற்றும் டாக்டர் கிபாயா இப்திகார் றிசானாவின் விடுதலைக்காக போராடியவர்களில் ஒருவர் இவர் மிகவும் மும்முரமாக றிசானாவை மீட்க மிக கடுமையாக உழைத்தார்.
றிசானாவை வைத்திருந்த சஊதி அரேபிய சிறைச்சாலைக்கு அடிக்கடி சென்று றிசானாவை சந்தித்த ஒருவரே டாக்டர் கிபாயா இப்திகார்
இவர் றிசானாவை பார்ப்பதற்கு சிறைச்சாலைக்கும் போகும் போதெல்லாம் றிசானாவுக்கு ஆறுதல் கூறி என்றாவது ஒரு நாள் நீ விடுதலையாகுவாய் இலங்கைக்கு சென்று உனது தாய் தகப்பன் குடும்பத்துடன் சந்தோசமாய் இருப்பாய் என்று றிசானாவுக்கு ஆறுதல் கூறி வந்தவரே டாக்டர் கிபாயா இப்திகார்.
றிசானாவை எப்படியாவது மீட்டுவிடலாம் என்று சஊதி அரேபியாவில் போராடிய டாக்டர் கிபயா இப்திகார் வழமை போன்று றிசானாவை வைத்திருந்த சிறைச்சாலைக்கு 09.01.2013 புதனகிழமை காலை சென்ற போது றிசானாவை பார்க்கமுடியாமல் கவலையுடன் வீடு திரும்பினார்.
கடந்த நான்கு ஐந்து தினங்களுக்கு முன்னர் றிசானாவை பார்க்கச் சென்ற டாக்டர் கிபாயா இப்திகார் றிசானாவை அவரது தாயாருடன் தொலைபேசியில் கதைப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
டாக்டர் கிபாயா இப்திகார் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னரே றிசானாவின் மரண தண்டனை மீளவும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடைசியாக றிசானாவை பார்ப்பதற்காக புதன்கிழமை காலை டாக்டர் கிபாயா இப்திகார் சென்ற போது றிசானாவுக்காக றிசானா விருத்பி சாப்பிடும் சொக்ளட்டையும் மற்றும் புதிய ஆடைகளையும் எடுத்துச் சென்றிருந்தார். ஆனால் சிறைச்சாலை சென்றபோது டாக்டர் இப்திகாருக்கு விடயம் விளங்கி விட்டது கொண்டு போன சொக்ளட் மற்றும் புதிய ஆடைகளை சிறைச்சாலை முன்பாக வைத்து விட்டு அழுகையுடன் டாக்டர் இப்திகார் வீடு திருமபினார்.
டாக்டர் இப்திகார் றிசானாவை பார்க்கச் கடைசியாக சென்ற போது நோனா நான் எப்போது எனது உம்மாவை பார்ப்பேன் நான் எப்போ வீட்டிற்கு போவேன் என்று றிசானா டாக்டர் கிபாயா இப்திகாரை பார்த்து கேட்டு;ள்ளார் அதற்கு டாக்டர் கிபாய அடுத்த முறை நான் இங்கு வரும் போது நீ ஸ்ரீலங்காவுக்கு போய் விடுவாய் என்று டாக்டர் கிபாயா கூறியுள்ளார்.
இதற்கு நோணா நீங்கள் எப்பவும் இப்படித்தான் சொல்கிறீர்கள் என டாக்டர் கிபாயா வைப்பார்த்து றிசானா கூறியுள்ளார்.
றிசானாவுக்கு சிறைச்சாலைக்குள் இருந்த காலத்தில் நூற் பந்துகள் வழங்கப்பட்டிருந்தன. ஆந்த நூற் பந்துகளை வைத்து அவர் கைப்பணிப் பொருட்களை செய்து வந்தார் டாக்டர் கிபாய சிறைச்சாலைக்கு செல்லும் போது றிசானா செய்த அந்த கைப்பணிப்பொருட்களை காட்டி காட்டி மகிழ்ந்துள்ளார்.
கடந்த நான்கு ஐந்து தினங்களுக்கு முன்னர் றிசானாவை பார்க்கச் சென்ற டாக்டர் கிபாயா இப்திகார் றிசானாவை அவரது தாயாருடன் தொலைபேசியில் கதைப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
டாக்டர் கிபாயா இப்திகார் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னரே றிசானாவின் மரண தண்டனை மீளவும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment