அக்கரைப்பற்று வலயத்திலுள்ள பாலமுனை இப்னுஸீனா வித்தியாலயத்திற்கு இன்று (10. 01. 2013) பெய்த கடும் மழையையும் பொருப்படுத்தாது வலய மட்டத்திலான பரிசோதனைக் குழுவினர் உதவிக் கல்விப் பணிப்பாளர் என். ஜமால்தீன் மற்றும் அட்டாளைச்Nனை அந்நூர் மகாவித்தியாலய அதிபர் ஏ.சி. கஸ்ஸாலி, மற்றும் வலயக் கல்விப் பணிமனை உதவிக் கல்விப் பணிப்பாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும் இணைந்து விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். அவ்விஜயத்தின்போது பாடசாலையின் நிலைமைகளையும் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.
இப்னுஸீனா வித்தியாலயம் கடந்தாண்டில்தான் ஆரம்பமானது. முன்னர் வேறொரு பாடசாலையாக இருந்த இவ்விடத்தில் ஆரம்பக்கல்விக்கான வகுப்புக்களைத் தனியாகவைத்து செயற்பட வேண்டும் என்கிற நோக்கில் கடந்தாண்டிலிருந்து புதிய பெயருடன் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் அதிபராக கே. ஹம்மாமுதீன் நியமிக்கப்பட்டு பிள்ளைநேயப் பாடசாலைத் திட்டதிலும் இணைக்கப்பட்டு யுனிசெப் நிதியுதவியுடன் பல்வேறு பௌதீக மற்றும் கற்றலுக்கான வகுப்பறைச் சூழலையும் ஏற்படுத்தும் முகமாக பலதரப்பட்ட திட்டங்களும் கடந்தாண்டுமுதல் மேற்கொள்ளப்பட்டு வலயத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது.
இதனை இவ்வாண்டு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையும், புதிய ஆண்டில் இப்பாடசாலை மேற்கொள்ளவுள்ள திட்டங்களையும் அவதானிக்கவே இவ்விஜயத்தை மேற்கொண்டதாவும் கூறப்படுகின்றது.
இருப்பினும் பாடசாலையின் சுற்றுப்புறச் சூழல் மழைகாலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கின்ற ஒரு இடமாகவே தற்போதும் காணப்படுவதாக அதிபர் கே.ஹமாமுதீன் தெரிவித்தார். 267 மாணவர்களைக் கொண்டமைந்த இப்பாடசாலையில் தற்போது எட்டு ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். இப்பாடசாலையின் வகுப்பறைகளுக்கு விஜயம் செய்து வகுப்பறைகளின் நிலைமைகளைப் பார்வையிட்டு மேலும் கற்றலுக்கான ஆலோசனைகளை கல்வி அதிகாரிகள் முன்வைத்தனர். அதிபர் காரியாலயம், ஆசிரியர் ஓய்வறை போன்றவற்றின் நிலமைகளையும் பார்வையிட்ட வலயக் கல்விக் குழுவினர் பாடசாலையினதும்,
மாணவர்களினதும் அடைவினை அதிகரித்துக் கொள்வதற்கான ஆலோசனைகள் பலவற்றையும் முன்வைத்தனர். ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள விடயங்கள், அதிபர் காரியாலய தளர்பாடக்குறைபாடுகள், மாணவர்களுக்கான மேசை கதிரைக்கான குறைபாடுகள் போன்றவற்றை உரிய அதிகாரிகளுக்கு எத்திவைப்பதாகும் அங்கு கூறப்பட்டது.
(பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட உதவிக் கல்விப் பணிப்பாளர்,ஆசிரிய ஆலோசகர்கள் ஒன்று கூடலில் இருப்பதையும், பாடசாலையின் நிலைமைகளையும் படங்களில் காணலாம்)
0 comments :
Post a Comment