கல்முனையில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு முதல்வர் சிராஸ் உடனடி நடவடிக்கை -(படங்கள் இணைப்பு)









பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசத்தின் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் குடியிருப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (05.01.2013) குறித்த பிரதேசங்களுக்கு  விஜயம் செய்து ​அவ்வெள்ள நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

பாண்டிருப்பு அல் மினன் வீதிஇ கல்முனை தமிழ் பிரிவில் உள்ள குவாரி வீதிஇ வட்ட விதான வீதிஇ மாதவன் வீதிஇ கல்முனைக்குடி செய்லான் வீதிஇ புதிய வீதி அகியவற்றிலும் அவ்வீதிகளில் அமைந்துள்ள குடியிருப்புக்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் வழமையான நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரதேசங்களுக்கு ஜே.சி.பி வாகனத்துடன் சென்று முதல்வர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாய் வெள்ள நீர் வடிந்தோடியது.

அல்மினன் வீதிஇ மாதவன் வீதி என்வற்றில் வடிகான் அமைக்கப்படாமையினாலும்இ குவாரி வீதிஇ வட்ட விதான வீதி என்வற்றில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்கள் தொடர்ச்சி இன்மையினாலும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

குறித்த வடிகான்களை மாநகர சபையினால் 2013ம் ஆண்டு மேற்கொள்ளப்படவிருக்கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மக்களிடம் முதல்வர் தெரிவித்தார்.  

இவ்விஜயத்தின்போது ஆணையாளர் ஜே.லியாகத்அலி மற்றும் ஊழியர்கள் பிரசன்னமாயிருந்தனர்  














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :