ஆசிட் வீச்சில் கண்களை இழந்த வினோதிக்கு அரசு ரூ.2 லட்சம் உதவி....!

(அசார் சம்)

காரைக்கால் மாவட்ட கலெக்டர் ஜெ.அசோக்குமார் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

காரைக்காலில் கடந்த நவம்பர் 14-ந் தேதி ஆசிட் தாக்குதலுக்கு ஆளான வினோதினி மற்றும் அவரது தந்தை ஜெயபால் ஆகியோரது மருத்துவ செலவிற்காக முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அமைச்சர் சந்திரகாசு மூலம் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான காசோலை ஒப்படைக்கப்பட்டது.

தற்சமயம் வினோதினியும், அவரது பெற்றோரும் சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கண்ட நிவாரணத் தொகைக்கான காசோலையை அவர்களிடம் நேரில் வழங்க சிறப்பு அலுவலர் பணியமர்த்தப்பட்டு சென்னையில் வழங்கப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :