றிப்தி அலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்த கட்சியாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என அக்கட்சி அறிவித்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு ஆளும் தரப்புடன் இணைந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அக்கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்தார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பது என்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் தீமானத்திற்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்ட நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியிடம் தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டபோது, புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளோம். இந்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நானும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரே கைச்சாத்திட்டோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் ஐக்கிய தேசிய கட்சியினால் எடுக்க முடியாது என குறித்த ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதற்கு அதிகாரமுள்ளது எனவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது" என்றார்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டு ஆளும் கட்சிக்கு மாறிய ரவூப் ஹக்கீம், பசீர் சேகுதாவூத், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், எம்.எஸ்.தௌபீக், எம்.பி.முஹம்மட், முஹம்மட் அஸ்லம், அப்துல் காதர், லக்ஷ்மன் செனவிரத்ன, எர்ல் குணசேகர, மனுஷ நாணயக்கார, நிமல் விஜயசிங்க, உபேஷ்கா சுவர்ணமாலி, மொகான் லால் கிரேரோ, பி. திகாம்பரம் மற்றும் பிரபா கணேசன் ஆகியோருக்கு எதிராகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.TM

0 comments :
Post a Comment