காயமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு புளூமென்டல் வீதியைச் சேர்ந்த அங்கஸ் பெரேரா (வயது 30) என்பவரே இவ்வாறு
தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான இப்பெண் காயமடைந்த நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார். இது
தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற இப்பெண்
அவரது முதலாளியினால் இரக்கமின்றி தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது இடது கையில் 5 வெட்டுக் காயங்களும் வலது கையில் எரிகாயங்களும்
காணப்படுகின்றன. அத்துடன்இ தனது தலையில் ஆடைகளைக் கழுவும் இரசாயன பதார்த்தம்
போடப்பட்டதாகவும் தாக்குதலினால் தான் பாதிக்கப்பட்டதாகவும் இப்பெண் கூறினார்

0 comments :
Post a Comment