ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் யாரும் தலையிடக்கூடாது - திரிஷா

சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் (17) வியாழன் அன்று நடந்தது. படத்தின் நாயகன் விஷால், நாயகி த்ரிஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 

இந்த படத்தில் த்ரிஷா மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி த்ரிஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 

நான் மது அருந்துவதுபோல் காட்சி இடம்பெற்றால் அந்த படம் வெற்றி அடைகிறது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். நான் இதனை இந்தப் படத்தின் இயக்குநரிடம் சொன்னேன். 

அதனால்தான் இந்தப் படத்தில் நான் மது அருந்துவது போல் காட்சி அமைத்தார். மது அருந்துவதுபோல் நான் நடிப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை. ஏனென்றால் நான் அந்த காட்சிகளில் பெப்சிதான் குடிக்கிறேன். அது உண்மையான மது அல்ல என்றார். 

இந்த காலத்து பெண்கள் மது அருந்துவது சரியா? தவறா என்ற கேள்விக்கு, அது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் நாம் தலையிடக் கூடாது என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :