பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீா் காலமானார்





பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீா் காழி ஹூஸைன் அஹ்மத் தனது 74 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (06.01.2013) இஸ்லாமாபாத்தில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மரணம் பொதுவாக இஸ்லாமிய உம்மத்திற்கும் குறிப்பாக சர்வதேச இஸ்லாமிய இயக்கத்திற்கும் ஓர் இழப்பாகும்.

இஸ்லாத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான சக்திகளை துணிந்து எதிர்கொண்ட மாபெரும் ஆளுமைமிக்க ஒரு தலைவராவார். இவா் ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞரும் பாகிஸ்தானில் இஸ்லாமிய மறுமலா்ச்சிக்காக கடுமையாக உழைத்தவருமாவார்.

அன்னாரின் மரணம் குறித்து இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீா் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பா் அவா்களும்இ மத்திய மஜ்லிஸ் ஷூரா உறுப்பினா்களும் அங்கத்தவா்களும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்தினருக்கும் பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி அங்கத்தவா்களுக்கும் தெரிவித்துக் கொள்வதுடன் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸை வழங்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றனா்.

ஊடகப் பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
Secretariat
Sri Lanka Jama`ath-e-Islami
#77, Dematagoda Road,
Colombo -00900, 
Sri Lanka.
Phone : 0094-112-687091, Fax : 0094-112686030
e-mail : gsslji@gmail.com


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :