சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் பாடசாலை மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.பீ.முஜீன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதி கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.தௌபீக், சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றகீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
2010 ,2011, 2012 ஆகிய மூன்று வருடங்களிலும் தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 87 பேர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வைபவத்தில் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இதில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment