அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிடம் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா நிதியில் ஆரம்பம்




(எஸ்.எம்.அறூஸ்)

புறநெகும திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  நாளை 2012-12-19 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சந்தை சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நடைபெறவுள்ள இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

புறநெகும திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ள இச்சந்தைக் கட்டிடம் முன்னால் பிரதேச சபைத் தவிசாளர் மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த கட்டிடமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிடம் அமைக்கப்படுவதில் பிரதேச சபைக்கும், மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கும் இடையில் நீண்டகாலமாக பணிப்போர் இருந்து வந்ததுடன் இக்கட்டிடம் எவ்விடத்தில் அமைப்பதென்பது தொடர்பாக கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சரினால் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.


செய்திகளைப்படித்த பெருமதிப்பிற்குரிய நீங்கள் அப்படியே கீழே உள்ள இம்போட்மிரர் பேஸ் புக் இல் உள்ள லைக் ஐ கிளிக் பன்னி உச்சாகப்படுத்தலாம். நன்றி...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :