கல்முனை மாநகர முதல்வர் தலைமையிலான குழு அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா சந்திப்பு.

கல்முனை மாநகர சபைக்கான நிர்வாக கட்டிடத்தை அமைத்துத்தருவதாக மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா இணக்கம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர முதல்வர் தலைமையிலான குழு இன்று (17.12.2012) காலை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சந்தித்து கலந்துரையாடியபோது மேற்குறித்த உறுதியினை வழங்கினார்.
கல்முனை மாநகர சபைக்கான நிர்வாக கட்டிடமின்மை, ஆளனி பற்றாக்குறை, நிர்வாக பிரிவின் உபயோகத்திற்கான வாகனம் இன்மை, திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான உழவு இயந்திரங்கள் இன்மை, நூலகங்களை தரம் உயர்த்தல்
மற்றும் உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லைகள் தொடர்பாகவும் முதல்வரினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 
இதன்போது மேற்படி விடயம் தொடர்பாக முதல்வரினால் அமைச்சரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.   
மேற்குறித்த விடயங்களை நிவர்த்தி செய்து தருவதாகவும் கல்முனை மாநகர சபைக்கான நிர்வாக கட்டிட அமைவிடத்தினை நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் அமைத்துத்தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர்அலி, ஏ.நிசார்டீன், ஏ.எம்.பரக்கத்துள்ளா, ஐ.எம்.பிர்தௌஸ், இஸட்.ஏ.எம்.றகுமான், ஏ.விஜெயரட்னம், ஆசிய மன்ற நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :