இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஹொபார்ட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 450 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
மைக் ஹசி 115 ஒட்டங்களைப் பெற வெலகெதர 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 336 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இதில் தில்ஷான் 147 ஓட்டங்களைப் பெற பிட்டர் சிடேன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 278 ஓட்டங்கள் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதில் வார்னர் 68 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்படி 393 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி போட்டியின் 5ம் நாளான இன்று 255 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
போட்டியின் ஆட்ட நாயகனாக பீட்டர் சிடேல் தெரிவுசெய்யப்பட்டார்.

0 comments :
Post a Comment