கடத்தப்பட்ட மணப்பெண்ணை விடுவிப்பதானால் தமக்கு 1.19 மில்லியன் திர்ஹம்களை கப்பமாகத் தர வேண்டும் - கடத்தல் காறர்கள்

தனது திருமண வைபவத்துக்காக ஹோட்டலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த மணப்பெண்ணை வழிமறித்து கடத்திச் சென்று கப்பம் கோரிய சம்பவம் ஒன்று எகிப்தில் இடம்பெற்றுள்ளது. இப் பெண்ணைக் கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட குழுவினரை 24 மணி நேரத்துக்குள் பொலிசார் கைது செய்துள்ளதுடன் மணப்பெண்ணையும் அவர்களிடமிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மணப்பெண்ணை விடுவிப்பதா
னால் தமக்கு 1.19 மில்லியன் திர்ஹம்களை கப்பமாகத் தர வேண்டும் என கடத்தல்காரர்கள் கோரியுள்ளனர். 





மணப்பெண்ணின் குடும்பத்தினர் அதில் அரைவாசித் தொகையை கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபோதிலும் விரைந்து செயற்பட்ட பொலிசார் மணப்பெண்ணை மீட்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தல்காரர்களின் ஒருவர் குறித்த பெண்ணை ஏலவே காதலித்ததாகவும் தன்னை ஏமாற்றியதாலேயே இவ்வாறு கடத்திச் செல்ல முயன்றதாகவும் கைது செய்யப்பட்ட குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :