Share on
பாலியல் பலாத்கார சர்ச்சையில் சிக்கிய ஆப்கானின் அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜான் அலனுக்கு அதிபர் பாரக் ஒபாமா ஆதரவு அளித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் காரணமாக அலனை ஆப்கான் அமெரிக்க கமாண்டர் பதவியில் இருந்து நீக்கமாட்டோம். அவரது சேவை நாட்டிற்கு தேவை என்று ஒபாமா கூறியதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜெ.கார்னி தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் அடுத்த நேட்டோ கமாண்டராக அலன்
பாலியல் பலாத்கார சர்ச்சையில் சிக்கிய ஆப்கானின் அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜான் அலனுக்கு அதிபர் பாரக் ஒபாமா ஆதரவு அளித்துள்ளார்.குற்றச்சாட்டுக்கள் காரணமாக அலனை ஆப்கான் அமெரிக்க கமாண்டர் பதவியில் இருந்து நீக்கமாட்டோம். அவரது சேவை நாட்டிற்கு தேவை என்று ஒபாமா கூறியதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜெ.கார்னி தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் அடுத்த நேட்டோ கமாண்டராக அலன்
நியமிக்கப்படுவார் என்றும் கார்னி கூறுகிறார்.
அலனின் சர்வேஸ் ஆவணங்களில் அதிபருக்கு திருப்தி என்றும், ஒப்படைத்த பணிகளை சரியாக ராணுவ கமாண்டரும், சி.ஐ.ஏ இயக்குநரும் செய்துள்ளதாகவும் கார்னி கூறினார். ஃப்ளோரிடாவைச் சார்ந்த ஜில் கெல்லிக்கு ஜான் அலன் ஆபாசமான, முறைகேடான மின்னஞ்சல்களை அனுப்பியதை எஃப்.பி.ஐ கண்டுபிடித்திருந்தது. அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் தலைவர் டேவிட் பெட்ரோஸுடன் தவறான உறவை கொண்டிருந்த பவ்லா ப்ராட்வெல், கெல்லிக்கு அனுப்பிய மிரட்டல் தொடர்பான இ-மெயிலைக் குறித்து விசாரணை நடந்தபோது அலனின் பாலியல் துஷ்பிரயோகம் வெளியானது.

0 comments :
Post a Comment