Share on
இன்று (29.11.2012) வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, நாட்டின் மேம்பாட்டிற்கும் அபிவிருத்திக்கும் அடிப்படையான இரண்டு விடயங்கள், தேசிய ஒருங்கிணைப்பும் சமூகங்களுக்கிடையிலான இணக்கமும், அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அரச கரும மொழி ஏற்பாடுகளை நடைமுறை படுத்துவதுமாகும் என்பது தனது கருத்தாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களும் இத்தகைய கருத்தை கொண்டுள்ளதன் அடிப்படையிலேயே இவ்விடயங்களுக்கான அமைச்சு ஒன்று இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது....
கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களை அதற்கான அமைச்சராகவும் நியமித்துள்ளார். இது ஒரு மிகவும் மதியூகமான செயல். இனப் பிரச்சினைக்காண தீர்வை பொருத்தவரையில் அது பற்றி கடந்த ஆறு தசாப்தங்களாக சரியான முறையான சிந்தனையுடன் செயற்பட்டு வந்தவர் வாசுதேவ நாணயக்கார அவர்கள்.
அவர் பெருமை மிகு இடது சாரி பாரம்பரியத்தில் வந்தவர். அவருடைய மூத்த தலைவர்களான கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா போன்றவர்கள் இந்த அவையிலே தமிழ் மொழிக்கு சமமான அரச கரும மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று உரையாற்றியவர்கள், போராடியவர்கள்.
அவர்களின் பாசரையில் வழி வந்த நாணயக்கார அவர்களை விட்டால் தமிழ் மொழி அமுலாக்கத்திற்கும் தேசிய இனக்கத்திற்கும் இன்னொரு சிந்தனையாளரை நாம் அரசாங்க கட்சியில் தேடிக் கண்டறிய முடியாது.
தமிழ் மக்களின் மற்றும் சிறுபான்மை இன மக்களின் சகல பிரச்சினைகளையும் பற்றிய தெளிவான புரிந்துணர்வைக் கொண்ட அமைச்சர், தமது அமைச்சினூடாக சகல அரசாங்க திணைக்களங்களிலும் தமிழ் மொழி ஆக்கத்திற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதையிட்டு நான் அவரைப் பாராட்டுகின்றேன்.
என்றாலும் தமிழில் ஒரு பழமொழி உண்டு. இறைவன் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் என்பார்கள். அது போல இவருடைய கொள்கைகளை அமுல்படுத்த பல திணைக்கள தலைவர்கள் தவறி விடுகின்றார்கள்.
இதற்கு ஒரு அலட்சிய போக்கு காரணமாக இருக்கலாம். அல்லது கொள்கையை அமுல் நடத்த போதிய ஆளணி இல்லாதிருக்கலாம்.
காரணங்கள் எதுவாயினும் பல திணைக்களங்களில் தமிழ் மொழியாக்கம் சரியாக நடைபெறுவதில்லை என்ற முறைப்பாடு எனக்கு ஏராளமாக வருகின்றது. அமைச்சர் அவர்களுக்கும் இது பற்றிய முறைப்பாடுகள் கிடைத்திருக்கலாம்.
இத்தகைய அமுலாக்கலின்மை, அலட்சியப்போக்கு காரணமாக தமிழ் பேசும் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். தமது மொழிக்கு கிடைத்துள்ள அந்தஸ்து வெறுமனே ஏட்டில் மட்டும் தானா என அவர்கள் அங்கலாய்க்கின்றனர். தாங்கள் சமமாக நடாத்தப்படுகின்ற பிரஜைகள் தானா என சந்தேகிக்கின்றனர். தமக்கும் தமது மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் நாட்டில் அரசாங்க ரீதியான அந்தஸ்தும் உரிமையும் இல்லையா என கேட்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் செல்லும் அரசாங்க அலுவலகங்களில் காரியங்கள் இலகுவாக நடைபெறுவதில்லை. அவர்கள் பேசும் மொழி அரசாங்க அதிகாரிகளுக்கு விளங்குவதில்லை. அவர்களுக்கு தெரிந்த சிங்கள மொழி அறிவு மிகவும் சாதாரணமானது. அதனைக் கொண்டு அலுவல்களை செய்து கொள்ள முடியாது. இப்படியான நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கொள்கைகள் எவ்வளவு சிறந்தனவாயினும் அதிகார வர்க்கத்தின் உதவியும் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் இன்றி அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை நான் அறிவேன்.
இந்த சபையில் சமூகம் அளித்திருக்க கூடிய அரச அதிகாரிகள் இந்த சந்தர்ப்பத்திலாவது எனது கோரிக்கைக்கு செவி மடுத்து மொழி அமுலாக்கல் பணியில் மிகுந்த ஈடுபாட்டை காட்டி அமைச்சருடன் தோளோடு தோள் நின்று உழைக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டு பிரஜைகள். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டியவர்கள் என்ற உணர்வுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும். நாங்கள் பெறுகின்ற சகல முறைப்பாடுகள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்க முடியாது.
அவை எல்லாவற்றையும் பற்றி அமைச்சரிடம் முறைப்பாடு செய்து கொண்டிருக்க முடியாது. எங்கெங்கே தவறுகள் இடம்பெறுகின்றன என்பதை திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்து ஆவன செய்ய வேண்டும்.
மிக முக்கியமாக பாடசாலைத் தலைவர்களுக்கான அரசாங்க கடிதங்கள், சுற்றறிக்கைகள் யாவும் சிங்கள மொழியில் மட்டுமே அனுப்பப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அத்துடன் பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடாத்தப்படுகின்ற கருத்தரங்குகள் பெரும்பாலும் ஒரே மொழியில் நடாத்தப்படுகின்றன. இதனால் கருத்தரங்குகளில் கூறப்படுகின்ற முக்கியமான விடயங்கள் தமிழ் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரியாகப் புரிவதில்லை.
இதனால் தமிழ்மொழிப் பாடசாலைகளில் அரசாங்கத்தின் கல்வி கொள்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில் கடுமையான தாமதம் ஏற்படுகின்றது.
அதிபர்களும் மிகுந்த விரக்தியுடன் செயலாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. தமிழ் பாடசாலைகளில் கல்வி கொள்கைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாது கல்வி தராதரங்கள் வீழ்ச்சியடைய நேரிடுகின்றது.
இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்தல் வேண்டும். எனக்கு வருகின்ற முறைப்பாடுகளின்படி மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் இடம்பெறுகின்ற பல கற்கை நெறிகள் முற்றாகவே சிங்கள மொழியில் நடாத்தப்படுகின்றன.
விளம்பரத்தில் ஆங்கில மொழி மூலக் கற்கை நெறி என சொல்லப்பட்டதை நம்பி தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் இக் கற்கை நெறிகளைப் பயில வருகின்றனர். வந்த பின்னர் எல்லாமே சிங்கள மொழியில் நடாத்தப்படும் பொழுது அவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. இதற்காகவே அவர்கள் படிப்பு லீவில் வந்தவர்கள். அவர்களுடைய பரிதாப நிலை அங்கு பயிலும் சிங்கள ஆசிரியர்களுக்கும் கூட நன்றாக தெரிந்திருக்கின்றது.
இறுதி நேரத்தில் ஏதோ ஒரு வழியில் தமிழ் விரிவுரையாளர்களை அவசரமாக அழைத்து தமிழில் சாராம்ச விரிவுரைகளை நடத்துவதாக அறிகின்றேன். இதனையிட்டு கல்வி அமைச்சரும் உயர் அதிகாரிகளும் அக்கறை செலுத்த வேண்டும்.
உயர் அதிகாரிகளின் இத்தகைய அலட்சிய செயற்பாடுகளால் அரசாங்கத்தினுடைய பெயர்தான் கெடுகின்றது. இது பற்றி உரிய அதிகாரிகள் விசாரித்தறிந்து நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். இன்று வீதிகளெங்கும் நகரங்களெங்கும் அல்லது அரசாங்க அலுவலகங்கள் எங்கும் செல்லும் போது நாங்கள் அவதானிக்ககூடிய ஒரு விடயம் தமிழ் கொலை.
வீதிப் பெயர்கள், நகரப் பெயர்கள் மற்றும் திணைக்களப் பிரிவுகளின் பெயர்கள் பல இடங்களில் பிழையான தமிழில் மிக மோசமான எழுத்துப் பிழைகளுடன் ஆனால் அழகாக எழுதப்பட்டுள்ளன.
இதையெல்லாம் பட்டியல் போட்டு காட்ட முடியாது. அந்த காலத்தில் மாணவர்கள் எழுத்துப் பிழை விட்டால் ஆசிரியர்கள் அதற்காக தண்டனை வழங்குவார்கள். அப்படியாயின் அரசாங்க அலுவலகங்களே இத்தகைய தவறுகளை இழைக்கும் போது அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?
இவற்றைப் பார்க்கும் பொழுது தமிழ் பேசும் மக்கள் அவமானத்தால் தலை குனிய வேண்டியுள்ளது. அந்நிய மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி தெளிவாக எழுதும் போது தமிழில் மடடும் ஏன் இவ்வாறான பிழைகள் விடப்படுகின்றன?
பெயர்ப் பலகைகளை எழுதுபவர்கள் மொழியை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் இப்படி செய்கின்றரார்கள் என்ற எண்ணம் தான் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது. இத்தகைய பிழை திருத்தங்களை அவதானித்து சீர் செய்வதற்கான மற்றொரு திணைக்களத்தை அமைக்க வேண்டும் போல தோன்றுகின்றது.
இவற்றையெல்லாம் அகற்றுவது ஒரு அமைச்சரின் பணியாக இருக்க வேண்டுமா? திணைக்கள தலைவர்கள் இந்த விடயத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். தமிழ் மக்கள் இவ்வாறான விடயங்களில் நொந்து போயுள்ளார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
அமைச்சர் நாணயக்கார போன்றவர்கள் 13வது திருத்தம் பற்றி சரியான புரிந்துணர்வை கொண்டவர்கள். இதனை அகற்ற வேண்டும் என்று பல பொறுப்பான அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் துடியாய் துடிக்கும் போது அவர் போன்ற இடது சாரி தலைவர்களும் இவ்விடயத்தில் ஒரு சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.
இருக்கின்ற பிரச்சினைகள் போதாதென்று சில பொறுப்பு வாய்ந்தவர்கள் புதிய புதிய பிரச்சினைகளை கிளப்பி அரசியல் இலாபம் காண முயற்சிப்பது வருந்தத்தக்க விடயம்.
தேசிய இணக்கத்திற்காக அமைச்சர் பாடு படும் போது மறுபுறம் ஒரு சில அமைச்சர்கள் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தேசிய இனக்கத்திற்கு ஒரு வழிபண்ணுவோம் என்று பந்தயம் போட்டு செயற்பட்டு வருகின்றனர்.
அமைச்சர் நாணயக்கார எப்போதுமே நீதியின் பக்கம் நிற்பவர் என்பதால் அவருடைய சகல செயற்பாடுகளுக்கும் என்னுடைய ஆதரவை தெரிவித்து அவருடைய கரங்களை வலுப்படுத்த விரும்புகின்றேன்.
வெள்ளவத்தையில் புதிதாக அங்கீகாரம் பெற்ற கொழும்பு தமிழ்ச்சங்க ஒழுங்கைப் பற்றி சிறிது கூற வேண்டும். மேல்மாகாண ஆளுநர் முதல் மந்திரி உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் யாவருடைய ஆதரவுடனும் 57வது ஒழுங்கைக்கு கொழும்பு தமிழ்ச்சங்க ஒழுங்கை என பெயரிடப்பட்டது.
25ம் திகதி வைபவரீதியாக இந்த ஒழுங்கை திறக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இந்த வைபவம் நிறுத்தப்பட்டது. எதிர்ப்பவர்கள் எந்த வகையில் சமூக நல்லிணக்கத்திற்கு ஒத்துழைக்கின்றார்கள்? அதே வெள்ளவத்தையில் ஐ.பி.சி பாதை என்ற பௌத்த மதத்தைக் குறிக்கும் ஒழுங்கை உள்ளது. அங்கு வசிக்கும் 95 வீதமானோர் தமிழர்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்கும் பொழுது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த நாட்டில் தேசிய இனக்கத்தை எவ்வாறு ஏற்படுத்த முடியும்?
மற்றொரு விடயம் 13வது திருத்தத்தை இரத்துச் செய்யக் கோறும் அமைச்சரகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் சமூக இன்னகத்திற்காக ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கின்றார்களா? அவர்களுடைய பேச்சு கருத்து நிலைபாடு செயற்பாடு அனைத்துமே சமூக இனக்கத்திற்கு துன்பகமாக இருக்கும் போது அமைச்சர் நாணயக்கார என்ன தான் செய்வார்? முதலில் அமைச்சரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாம் சமூக இனக்கத்திற்காக பாடுபடுவோம் என்று ஒரு பிரகடணத்தை செய்தாக வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
மீள்குடியேற்ற அமைச்சியைப் பொறுத்தவரையில் சில கருத்துக்களை மட்டும் சொல்ல விரும்புகின்றேன். சம்பந்தப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களிலே குடியேற விரும்புவர் மீள் குடியேற்றம் தொடர்பான சரியான வரைவிலக்கணமும் அது தான்.
அவர்களுடைய சொந்த இடங்கள் அவர்களுக்கு பழக்கமானவை. காலங்காலமாக அவர்கள் வாழ்ந்து வந்த இடங்கள். அவையே அவர்களுக்கு பழகிப்போன சுற்றாடல். அவர்களுடைய வயல் நிலங்கள், காடுகள் மற்றும் சொந்த பந்தங்கள் இருக்கும் இடங்களிலேயே அவர்கள் கூடி வாழ விரும்புவர்.
தமது சமூகத் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வது அவர்களுடைய சமூக வாழ்வாதரத்திற்கு முக்கியமானது. அவர்களை வேறு இடங்களில் குடியேற்றச் செய்வது மீள் குடியேற்றமாக கருதப்பட முடியாது.
இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாவதொன்று. எனவே இவ்விடயத்தில் அமைச்சரும் அதிகாரிகளும் மிகுந்த கவனத்துடனும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்தகைய புதிய இடங்களில் பல கட்டுப்பாடுகளுக்கிடையே வாழ நேரிடும் போது அவர்களுடைய வெறுப்பும் விரக்தியும் அதிகமாகின்றனர். இதனால் பல சமூக அமைதியின்மைகளும் கிளர்ச்சிகளும் ஏற்பட சாத்தியங்கள் உண்டு.
மீள்குடியேற்றம் இன்று பிரதானமாக வட பகுதியிலேயே நடைபெற்று வருகின்றது. உடனடியாக இது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் சம்பந்தப்பட்ட விடயம். அவ் உறுப்பினர்கள் இது பற்றிய விமர்சனங்களை வெளிநாடுகளில் சென்று முன் வைப்பதால் அவப் பெயர் மட்டுமே உண்டாகுமேயொழிய இதனால் நடைமுறையில் எந்தப் பயனும் இல்லை.
தாம் காணுகின்ற, கண்டறிந்த குறைபாடுகளை உரிய அமைச்சரிடம் அல்லது அதிகார பீடங்களுடன் அவைப்பற்றி கலந்துரையாடி தீர்வு காண முயல வேண்டும். இவ்விடயத்தில் ஓர் இணக்கமான அணுகுமுறையை கையாள்வதால் தான் சம்பந்தப்பட்ட மக்கள் பயனடைய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்தகைய மாபெரும் மீள்குடியேற்ற திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான இடையூறுகளும் சிரமங்களும் நடைமுறைப் பிரச்சினைகளும் உண்டு. அவற்றையெல்லாம் அரசாங்க அதிகாரிகள் உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள முடியாது என்பதை கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
நிச்சயமாக இம்மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகள் பற்றி தரவும், தகவல்களும் அவர்களிடம் நிறைய இருக்கலாம். அவற்றை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து சரியான தீர்வுகளை எட்ட அவர்களுடைய ஒத்துழைப்பும் உதவியும் நிச்சயமாக தேவை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இம் மக்களை மீளக் குடியேற்றுவதோடு அமையாது அவர்களுக்கான வாழ்வாதார வழிமுறைகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியுள்ளது. போருக்குப் பிற்பட்ட அழிவுபட்ட பிரதேசங்களில் குடியேறுகின்ற மக்கள் உடனடியாக அத்தகைய வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.
இந்த விடயத்திலும் மீள்குடியேற்ற அமைச்சு அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். மீள்குடியேற்ற அமைச்சர் மிகவும் சிந்தனையுடன் நேர்மையாக செயல்பட்டு வருவதை நான் அறிவேன். கூட்டமைப்பினரும் அவருடன் இவ்விடயத்திலாவது ஒத்துழைத்தால் அது எமது மக்களுக்கான விமோசனமாகும்.
(அத தெரண)

0 comments :
Post a Comment